ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி மீண்டும் காங்கிரஸில் ஐக்கியம்

0
0

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி இன்று மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்த கிரண் குமார் ரெட்டி, மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2014-ம் ஆண்டு பதவி இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறினர்.

பின்னர் ‘ஜெய் சமைக்யா ஆந்திரா’ என்ற புதிய கட்சியை தொடங்கி தேர்தலை சந்தித்தார். ஆனால் படுதோல்வி அடைந்தார். இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார். இந்தநிலையில் அவர் மீண்டும் காங்கிரஸில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கிரண் குமார் ரெட்டியை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்த கிரண் குமார் ரெட்டி மீ்ண்டும் காங்கிரஸில் இணைவதாக அறிவித்தார். அப்போது, ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.