ஆதார் குறித்த அடுத்தச் சர்ச்சை, டெலிகாம் நிறுவனங்களுக்கு நாங்கள் சொல்லவில்லை, ஆதார் ஆணயம் மறுப்பு! | Aadhaar toll free number creeps into mobile phones, UIDAI denies giving permission

0
0

இந்திய தனிநபர் அடையாள ஆணையம்

இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1800-300-1947 என்பதை நாங்கள் எந்த ஒரு டெலிகாம் மற்றும் மொபைல் நிறுவனங்களையும் சேர்க்க வேண்டும் என்று கூறவில்லை. வேண்டும் என்றே இந்த எண்ணானது தவறான நோக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ எண்

ஆதார் கார்டுக்கான அதிகாரப்பூர்வ இலவச அழைப்பு எண் 1947 மட்டும் தான் என்றும், கடந்த 2 ஆண்டுகளாக இந்த எண் தான் பயன்பாட்டில் உள்ளது என்று இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹேக்கர்

ராபர் பாப்டிஸ்ட் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் உங்கள் எல்லோர் போனிலும் UIDAI என்ற பெயரில் உதவி எண் உள்ளதா என்று பாருங்கள் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கேள்வி?

பல சேவை வழங்குநர்கள், ஆதார் கார்டு இணைப்பு செய்த, செய்யாத, ஆதார் செயலி நிறுவாத உங்கள் போனில் டீபால்ட்டாக ஆதார் உதவி என் திடீர் என்று வர காரணம் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா? என்றும் இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தினை டேக் செய்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

பீதி

மொபைல் போனில் டெலிகாம் நிறுவனங்கள் ஆதார் ஆணையத்தின் அறிவுறுத்தல் இல்லாமல் எப்படி இந்தப் பயன்படுத்தி இருக்க முடியும் என்ற சர்ச்சை சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுவும் ஹேக்கிங்கா, அல்லது டெலிகாம் துறையின் நடவடிக்கையா என்பதை மக்கள் பீதியடையாமல் இருக்க அரசு உறுதி செய்ய வேண்டும்.