ஆண்மை குறைவை குணப்படுத்த இந்த விலை குறைந்த காய் ஒன்றே போதும்..! | Amazing Health Benefits Of Nutmeg

0
0

விந்து எண்ணிக்கை உயர :-

இல்லற வாழ்வில் நிம்மதியின்றி இருப்பதற்கு முதல் காரணம் இந்த விந்து எண்ணிக்கை குறைவதாலே. பலரின் நீண்ட கால பிரச்சினையை விரைவில் குணப்படுத்த கூடிய ஆற்றல் இந்த ஜாதிக்காயிற்கு உள்ளது. இதற்கு ஜாதிக்காய் டீ குடித்தாலே போதும். சிறிது ஜாதிக்காய் தூளை எடுத்து 1 கிளாஸ் தண்ணீரில் 2 அல்லது 3 நிமிடம் கொதிக்க விட்டு குடியுங்கள். இது விந்து எண்ணிக்கையை அதிகரித்து ஆண்மை குறைவை குணப்படுத்தும்.

புற்றுநோய்க்கும் ஜாதிக்காய் :-

புற்றுநோய்க்கும் ஜாதிக்காய் :-

பெருகி வரும் வெளிநாட்டு உணவுகளின் மோகத்தால், இன்று அதிகப் பேர் பாதிக்கப்படும் நோய் ரத்த புற்றுநோய். இது வெள்ளை அணுக்களை தாக்கி அதன் எண்ணிக்கையை குறைத்து உடலை பலவீனப்படுத்தும். இதனால் ரத்தத்தில் புற்றுநோய் ஏற்படும். ஜாதிக்காய் வெள்ளை அணுக்களை அதிகரித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ரத்தத்தில் கொழுப்புகள் சேர்வதை குறைக்கிறது.

சுறுசுறுப்பான மூளை..!

சுறுசுறுப்பான மூளை..!

நம்மில் பலர் விரைவிலேயே சோர்வடைந்து விடுகின்றோம். இதற்கு முழு காரணம் நம் மூளைதான். ஜாதிக்காய் மூளையின் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, அதன் பாதையை செம்மைபடுத்தி சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. மேலும் அல்சைமர் போன்ற நோய்களையும் தடுக்கிறது.

தூக்கமின்மை :-

தூக்கமின்மை :-

ஒரு மனிதனுக்கு கட்டாயம் 6 மணி நேர தூக்கம் இன்றியமையாததாகும்.

பத்தில் 6 பேருக்கு தூக்கமின்மை நோய் இருப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது. நன்றாக இரவில் தூக்கம் வர வேண்டும் என்றால் ஜாதிக்காய் அவர்களுக்கு ஒரு நல்ல தீர்வு. நெய்யில் வறுத்தெடுத்த ஜாதிக்காய் பொடியை சிறிது பாலில் கலந்து தூங்குவதற்கு முன் இரவில் குடித்துவிட்டு தூங்கினால் நல்ல தூக்கம் வரும்.

ரத்த அழுத்தத்தை குறைக்க :-

ரத்த அழுத்தத்தை குறைக்க :-

ரத்த குழாய்களை சீரான முறையில் வைத்து கொள்ள அவசியமான ஒன்று பொட்டாசியம். ஜாதிக்காயில் உள்ள பொட்டாசியம், உடலின் ரத்தம் பாயும் பகுதிகளை சீராக்கி ரத்த அழுத்தத்தை குறைகிறது. மேலும் இதில் உள்ள இரும்பு சத்து சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

பல் உறுதிக்கு :-

பல் உறுதிக்கு :-

“மசாலாக்களின் ராஜா” என்றே ஜாதிக்காயை அழைப்பார்கள். உணவில் ருசி அதிகரிக்க இதனை பயன்படுத்துவார்கள். இத்தகை பெருமை வாய்ந்த இது பற்களின் பிரச்சினைகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பற்களின் ஈறுகளை உறுதிப்படுத்தி, சொத்தை அடைவதை தடுக்கிறது.

சரும ஆரோக்கியத்திற்கு :-

சரும ஆரோக்கியத்திற்கு :-

இந்த ஜாதிக்காய் முக ஆரோக்கியத்தையும் நன்கு பாதுகாக்கிறது. முகத்தில் ஏதேனும் வீக்கம், எரிச்சல், முகப்பருக்கள் இருந்தால் அதனை முற்றிலுமாக குணப்படுத்தி விடும். ஜாதிக்காய் பொடியை தேனுடன் கலந்து பேஸ்ட் போன்று செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுங்கள். விரைவிலே நல்ல பலனை தரும்.

மலச்சிக்கலை குணப்படுத்த :-

மலச்சிக்கலை குணப்படுத்த :-

உண்ணும் உணவில் நார்சத்துக்களை சீராக்கி வயிற்று கோளாறுகளை சரி செய்யும். குடலின் செயல்பாட்டை சரியான முறையில் வைக்க இது உதவும். மேலும் செரிமானத்தை நன்கு தூண்டி ஜீரண பிரச்சினைகளை குணப்படுத்தும். இதனால் எளிதில் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம்.

செய்ய கூடாதவை :-

செய்ய கூடாதவை :-

கர்ப்பம் அடைந்தவர்கள் ஜாதிக்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மேலும் குறிப்பிட்ட அளவே இந்த ஜாதிக்காயை பயன்படுத்த வேண்டும்.