ஆசிய விளையாட்டு போட்டியில் தேசிய கொடியை ஏந்திச் செல்கிறார்: ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா

0
0

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் வரும் 18-ம் தேதி கோலாகல மாக தொடங்குகிறது. 4 வருடங் களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆசிய விளையாட்டு திருவிழா வில் இம்முறை இந்தியாவில் இருந்து 572 வீரர், வீராங்கனைகள் என பயிற்சியாளர்கள், உதவியாளர் கள் என மொத்தம் 800 பேர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியை வழியனுப்பும் விழா நேற்று டெல்லியில் நடை பெற்றது. இதில் மத்திய விளை யாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர் தன் சிங் ரத்தோர், இந்திய ஒலிம் பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

அப்போது ஆசிய விளையாட்டு போட்டியில் தேசிய கொடியை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஏந்திச் செல்வார் என நரிந்தர் பத்ரா அறிவித்தார். 20 வயதான நீரஜ் சோப்ரா, இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியில் தங் கப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர் களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ராதங்கப் பதக்கம் வென்றிருந் தார். நீரஜ் சோப்ரா கூறும்போது, “ஆசிய விளையாட்டு போட்டி யில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வதற்கு தேர்வு செய்யப் பட்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். பெரிய அளவிலான ஒரு தொடரில் இந்திய அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பு மிகப்பெரிய கவுரவம். ஈட்டி எறிதல் போட்டி 27-ம் தேதிதான் நடைபெறுகிறது. தற்போது போலந்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். தொடக்க விழாவில் தேசியக் கொடியை ஏந் திச் செல்ல உள்ளதால் நான் 17-ம் தேதியே ஜகார்த்தா சென்றடைந்து விடுவேன். இது பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை” என்றார்.

கடந்த 2014-ம் ஆண்டு தென் கொரியாவில் உள்ள இன்ஜி யான் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலத்துடன் மொத்தம் 57 பதக்கங்கள் வென்றிருந்தது. இம்முறை இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.