அருவியில் குளித்து மகிழ்ந்த தோனி – இந்து தமிழ் திசை

0
0

குண்டாறு அணைப்பகுதியில் உள்ள அருவியில் கிரிக்கெட் வீரர் தோனி குளித்து மகிழ்ந்தார்.

திருநெல்வேலி சங்கர் நகரில் நேற்று நடந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியைத் தொடங்கிவைக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வந்தார். முன்னதாக அவர், திருநெல்வேலியில் இருந்து காரில் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைப்பகுதிக்கு சென்றார்.

அங்கிருந்து, கரடு முரடான மலைப் பாதையில் 20 நிமிடம் ஜீப்பில் பயணம் செய்து, அங்கு உள்ள தனியார் அருவிக்கு சென்றார். இயற்கை காட்சியை ரசித்தபடி பயணம் செய்த அவர், தனியார் அருவியில் குளித்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர், ஜீப்பில் குண்டாறு அணைப் பகுதிக்கு வந்து, காரில் திருநெல்வேலி சங்கர் நகருக்கு வந்தார்.

தோனி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குண்டாறு அணை அருகே தோனியை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.குண்டாறு அணை அருகில் இருந்து தனியார் அருவிக்கு ஜீப்பில் பயணம் செய்த தோனி.