அரசியல் இரண்டரை மணி நேர படம் கிடையாது; பிரியா பவானி ஷங்கர்

0
0

அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேர படம் கிடையாது என்று நடிகை பிரியா பவானி ஷங்கர் கூறியுள்ளார்.

மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். தற்போது சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.

 

இவர் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் குறித்து கூறியதாவது:-

 

நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில வி‌ஷயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். 

 

எல்லோருக்குமே அரசியலில் தொடர்பு இருக்கிறது. நம்முடைய முகநூல் பக்கத்தைப் பார்த்தாலே நாம் பேசுவதுதான் அரசியல் எனபது புரிந்துவிடும். ரஜினி, கமல் இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

 

அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேரப் படம் கிடையாது என்று கூறியுள்ளார்.