அய்யோ பாவம், நல்ல நாளும் பொழுதுமா நோஸ் கட் வாங்கிய ‘மிஸ்டர் பி’ சதீஷ் | Poor Sathish gets nose cut

0
0

சென்னை: நடிகர் சதீஷ் பாவம் மகிழ்ச்சியில் ட்விட்டரில் கமெண்ட் போட்டு நோஸ் கட் வாங்கியுள்ளார்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகியுள்ளது. படம் பார்த்தவர்கள் அனைவரும் மாஸ், செம, சூப்பர், வேற லெவல் என்று பாராட்டுகிறார்கள்.

படத்தில் சிவாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்த சதீஷுக்கும் பாராட்டுகள் வந்து குவிகிறது.

சதீஷ்

சதீஷ் ப்ரோ உங்களின் நடிப்பு அருமை, கலக்கிட்டீங்க என்று தமிழ் படம் 2 படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் வாழ்த்தி வருகிறார்கள். அதில் சிலவற்றுக்கு சதீஷ் பதில் அளிக்கவும் செய்கிறார், சிலவற்றை ரீட்வீட் செய்கிறார்.

பாராட்டு

அய்யோ @actorsathish செம்ம பர்பாமன்ஸ்

நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு பண்ணிருக்கீங்க என்று ஒருவர் ட்வீட்டியிருந்தார். அதை பார்த்த சதீஷ் நன்றி தெரிவித்து பதில் அளித்தார்.

நோஸ்கட்

சதீஷ் நன்றி தெரிவித்ததை பார்த்த அந்த நபரோ, இன்னும் படம் பார்க்கவில்லை, ஞாயிற்றுக்கிழமை பார்த்துவிட்டு மீதியை சொல்கிறேன் என்று கூறி நோஸ் கட் செய்துவிட்டார்.

பதில்

இப்படி படம் பார்க்காமல் பாராட்டுவார்கள் என்று சதீஷ் எதிர்பார்த்திருக்க மாட்டார். எதிர்பார்த்திருந்தால் பாவம் இப்படி நோஸ் கட் வாங்கியிருக்க மாட்டார்.