அமேதியில் மக்கள் குறை கேட்டார் ராகுல்

0
0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் அமேதி தொகுதிக்கு சென்றார். 2-ம் நாளான நேற்று, கவுரிகஞ்ச் நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாணவர்கள், கட்சி நிர்வாகிகள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பு பொதுமக்களைச் சந்தித்தார். அப்போது அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.

உ.பி. முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராம் லகன் பாசியின் மகள் சங்கீதா ஆனந்த், தனது கணவருடன் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர்.

மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மாவோயிஸ்ட்களால் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர் மவுரியாவின் குடும்பத்தினரைச் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.