அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேச்சு நடத்த வாய்ப்பில்லை ஈரான் அமைச்சர் திட்டவட்டம்

0
0

அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவித் ஜாரிப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் முக மது ஜாவித் ஜாரிப் கூறியதாவது: ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. எங்கள் நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில் அமெரிக் காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை. அமெரிக்க அதிபரையோ, அந்த நாட்டு வெளியுறவு அமைச்சரையோ சந்தித்துப் பேச மாட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.