அமெரிக்காலயே தியேட்டரை அதிர வைத்த ‘தமிழ் படம் 2’: சிவா வேற லெவல் #TP2 | Tamizh Padam 2 emerges a winner: Hats off to Shiva

0
1

சென்னை: அமெரிக்காவில் ஒரு தியேட்டர் அதிர்ந்ததை தற்போது தான் பார்ப்பதாக அங்கு தமிழ் படம் 2 பார்த்த ஒருவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த தமிழ் படம் 2 இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. படத்தை விளம்பரப்படுத்த ஊர், உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் மரண கலாய் கலாய்த்து ஏகப்பட்ட போஸ்டர்கள் வெளியிட்டார்கள்.

இந்நிலையில் அந்த படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் சிரிப்பு சப்தம் பலமாக கேட்கிறதாம்.

தியேட்டர்

அமெரிக்காவில் ஒரு தியேட்டர் அதிர்ந்து இப்போ தான் பார்க்கிறேன். அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா வாழ்க என்று படம் பார்த்த ஒருவர் பாராட்டியுள்ளார்.

குடோஸ்

மனஅழுத்தத்தை போக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழ் படம் 2. அமுதன் மற்றும் குழுவினருக்கு குடோஸ். சிவா தன்னுடைய ஹாட்ரிக் வெற்றியை தொடர்கிறார்.

நடிப்பு

படம் துவங்கியதில் இருந்து முடியும் வரை சிரிப்பு வெடி. படத்தை எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் என்று அமுதன் மற்றும் தயாரிப்பாளருக்கு தெரிந்துள்ளது. அகில உலக சூப்பர் ஸ்டார் நடிப்பு அருமை. கடைசில சிவாவையும் நடிக்க வெச்சுட்டீங்களே!!

கலாய்

ஒரு படம் விடாமல் வச்சு செஞ்சிருக்கீங்க

பாராட்டு

மிஸ்டர் பி… சதீஷ் இந்த பாராட்டு உங்களுக்கே உங்களுக்கு தான்

சர வெடி

பாரபட்சம் இல்லாமல் வச்சு செய்றது என்பதன் உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொண்டேன். படம் முழுக்க சிரிப்பு வெடி. சிவா, தலைவா நீங்க வேற லெவல்.