அமர்நாத் யாத்திரை 2-வது நாளாக ரத்து

0
0

நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை நேற்று 2-வது நாளாக நிறுத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் அமர்நாத் யாத்திரை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. பஹல்காம் மற்றும் பல்டால் பாதைகள் வழியே பக்தர்கள் சென்று பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர். மழை காரணமாக கடந்த செவ்வாய்கிழமை இரவு பல்டால் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் இறந்தனர். பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால் யாத்திரை நிறுத்தப்பட்டது. நேற்று பஹல்காம் மற்றும் பல்டால் பாதைகள் வழியே 2-வது நாளாக யாத்திரை நிறுத்தப்பட்டது. பாதைகள் சீர் செய்யப்பட்ட பிறகு யாத்திரை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.