அப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு! | Gossip on Bigboss agtress

0
18

பெரிய முதலாளி:

பெரிய முதலாளி வீட்டில் முக்கியமானவராக தற்போது அவர் வளைய வருகிறார். காரணம் அவர் இளமையான, திறமையான நடிகை என்பது மட்டுமல்ல, அனைவருடனும் எளிமையாக பழகும் சுபாவம் கொண்டவர் என்பதும் தான்.

நடிகையின் யுக்தி:

நடிகையின் யுக்தி:

ஆனால், புலி பதுங்குவது பாய்வதற்குத் தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். எப்போதும் ஆரம்பத்தில் இப்படி அடக்கி வாசிப்பது தான் அவரது டெக்னிக்காம். பின்னர் தன் வேலையை காட்டுவார் என்கிறார்கள்.

சிறிய படம்:

சிறிய படம்:

இதற்கு உதாரணமாக பெரிய முதலாளி வீட்டிற்கு செல்லும் முன் நடித்து வந்த படத்தில் நடந்த சம்பவத்தைக் கூறுகிறார்கள். கையில் வேறு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வந்த அப்படத்தில், ஆரம்பத்தில் மிகவும் எளிமையாக செலவுகள் எதுவும் வைக்காமல் இருந்துள்ளார்.

கேரவன் கேட்டு அடம்:

கேரவன் கேட்டு அடம்:

ஆனால், படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டவுடன், இனி தன்னை மாற்ற வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, தனி கேரவன் வேண்டும் என அடம் பிடித்தாராம். இதனால் வேறு வழியின்றி அதிக செலவு செய்து படக்குழுவும் அவருக்கு கேரவன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

செலவு அதிகம்:

செலவு அதிகம்:

தயாரிப்பாளர் குண்டா செய்யும் அளவு கொடுத்த பணத்தில், அண்டாவே செய்து அசத்த வேண்டும் என்ற தன் எண்ணத்தில் இதனால் மண் விழுந்து விட்டதாக நொந்து போயுள்ளார் இயக்குநர். இன்னும் நடிகை சம்பந்தப்பட்ட காட்சிகள் சில படமாக்கப்பட வேண்டி இருக்கிறது.

படக்குழு பயம்:

படக்குழு பயம்:

படவாய்ப்புகள் இல்லாமல் காற்றாடிய போதே கேரவன் கேட்டு அடம் பிடித்த நடிகை, இனி பெரிய முதலாளி வீட்டில் இருந்து வந்த பிறகு, இன்னும் என்னவெல்லாம் கேட்பாரோ என பயத்தில் இருக்கிறது படக்குழு.