அனிருத்தை விளாசிய சூர்யா ரசிகர்! | Surya Fan slams Anirudh!

0
0

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திற்கு சரியாக இசையமைக்கவில்லை என சூர்யா ரசிகர் அனிருத்தை சாடியுள்ளார்!

3 படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத். இவருடைய இசையில் தற்போது வெளியாகியுள்ள நயன்தாராவின் கோலமாவு கோகிலா பாடல்கள் ஹிட் அடித்துள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் மற்றும் சங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படங்களின் இசையமைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு அனிருத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சூர்யாவுக்கு மட்டும் நீங்கள் சரியாக ம்யூசிக் போடவில்லை என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் அனிருத்தை குறைகூறியுள்ளார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தாடியுடன் இருக்கும் புதிய தோற்றத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். அதற்கு ரீட்வீட் செய்த அனிருத், இந்த கெட்டப்பில் நாம் ஒரு படம் பண்ணுவோமா? தீம் ம்யூசிக் தயாராக உள்ளது என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், என்ன சார் கேக்குறீங்க.. நாம பண்றோம் சார். ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்கப்போகுது. நான் ரெடி சார்.. நாளைக்கே உங்கள சந்திக்கிறேன் சார் என பதிலளித்துள்ளார்.

இந்த உரையாடல்களை கவனித்த சூர்யா ரசிகர் ஒருவர், “எப்பா சாமி உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கும், தானா சேர்ந்த கூட்டத்திற்கு இசையமைக்க நேரம் இல்லை, உங்க நண்பர் என்றால் மட்டும் கூடுதல் கவனத்தோடு இசையமைக்கிறீர்கள்” இது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.

அனிருத்தின் இசையில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பாடல்கள் ஹிட் ஆனது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். பிறகு ஏன் அந்த கோபக்கார ரசிகர் அவ்வாறு குறை கூறினார் என்று தெரியவில்லை.