அதர்வா நடித்துள்ள 100 படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழு

0
0

சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா – ஹன்சிகா இணைந்து நடிக்கும் `100′ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆன்டன் இயக்கி வரும் படம், ‘100’. இதில் போலீஸ் அதிகாரியாக அதர்வாவும் அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும் நடிக்கின்றனர். இந்நிலையில் அதர்வாவை வைத்து த்ரில்லர் படமொன்றை இயக்கியிருக்கிறார்.  `100′ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

 

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக இயக்குநர் சாம் ஆன்டன் தெரிவித்துள்ளார். விரைவில் ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை தொடங்குவார் என்றும், அருமையான பாடல்களை கொடுத்துள்ள சாம்.சி.எஸ்.க்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  மேலும் அதர்வா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `பூமராங்’ அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது.