அடிச்சா மொட்டை, வச்சா குடுமின்னு இருக்கிறாரே பிக் பாஸ் | Bigg Boss is on extremes

0
0

சென்னை: அடிச்சா மொட்டை, வச்சா குடுமி என்று இருக்கிறார் பிக் பாஸ்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கிய புதிதில் அது மொக்கையாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தார்கள். இதையடுத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க பிக் பாஸும் ஏதேதோ செய்கிறார். ஆனாலும் மொக்கை, மொக்கை, கொடூர மொக்கை என்கிறார்கள் பார்வையாளர்கள்.

பிக் பாஸ் வீட்டில் ஒன்று சந்தோஷமாக சிரித்து பேசுகிறார்கள் இல்லை என்றால் மோதிக் கொள்கிறார்கள்.

பாலாஜி

நித்யா, பாலாஜி இடையே சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். ஆனால் பார்வையாளர்களோ பிக் பாஸ் நிகழ்ச்சி தாடி பாலாஜி வீட்டில் நடப்பதாக கலாய்க்கத் துவங்கினர்.

மோதல்

மோதல்

பார்வையாளர்கள் கலாய்ப்பதை பார்த்த பிக் பாஸ் நித்யா, பாலாஜியை தொடர்ந்து சண்டை போட விடாமல் அவ்வப்போது காதல், அவ்வப்போது மோதல் என்று மாற்றி மாற்றி பெர்ஃபார்ம் பண்ண வைக்கிறார்.

தூங்கியது

தூங்கியது

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும சிறை முதல் 3 வாரங்கள் எந்த பயன்பாடும் இன்றி தூங்கியது. அந்த சிறையை எதுக்கு வச்சிருக்கீங்க என்று விமர்சனம் எழுந்த பிறகு பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பயன்படுத்தினார்கள்.

யாஷிகா

யாஷிகா

சிறையில் யாரையாவது போட வேண்டுமே என்பதற்காக பொன்னம்பலத்தை பிடித்து போட்டார்கள். அதன் பிறகு போலீஸ், திருடன் டாஸ்க் வைத்து யாஷிகாவை பிடித்து சிறையில் அடைத்தார்கள். ஒரு ப்ராபர்டி இருக்கு என்றால் அதை தானாக பயன்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் விமர்சிக்கிறார்களே என்பதற்காக பயன்படுத்தக் கூடாது.

போலீஸ்

போலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்கள் போலீஸ் உடை அணிய வேண்டுமா? கடந்த ஆண்டு ஓவியா, இந்த ஆண்டு மும்தாஜ். மாத்தி யோசிங்க பிக் பாஸ்.